தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே உமையாள்புரத்தில் பல ஆயிரம் ஏக்கரில் ஆற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் நடந்து வருகிறது. காவிரி ஆற்றிலிருந்து கடைமடை பகுதியான உமையாள்புரம் வடக்கு கிராமத்திற்கு கணபதி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் புதர்மண்டிக் கிடப்பதால், விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்த அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.