அக்.3-இல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு
தஞ்சாவூர், செப்.30 - லக்கிம்பூர்கெரியில் விவ சாயிகள் படுகொலைக்கு காரணமான ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி அக்டோ பர் 3 அன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தொழிற்சங்கத்தி னர் முடிவு செய்துள்ளனர். தஞ்சாவூரில் தொழிற்சங் கங்கள் மற்றும் ஐக்கிய விவ சாயிகள் முன்னணி நிர்வாகி கள் பங்கேற்ற ஆலோச னைக் கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில், உத்தரப்பிர தேச மாநிலம், லக்கிம்பூர்கெ ரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக் குக் காரணமான மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவ ருக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும். தில்லி விவசாயிகள் போராட் டத்தில் பிரதமர் மோடி எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தவாறு, குறைந்த பட்ச ஆதார விலை நிர்ண யம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற ஒன்றிய அரசை வலியு றுத்தி, அனைத்து தொழிற்சங் கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பை ஏற்று, தஞ்சா வூர் ரயிலடியில் அக்டோபர் 3 அன்று காலை 10 மணிக்கு நாடு தழுவிய கருப்புக்கொடி ஆர்ப்பாட் டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு சிஐ டியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் தலைமை வகித் தார். ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச, ஏஐசிசிடியு, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தி னர் மற்றும் ஐக்கிய விவசா யிகள் முன்னணியினர் கலந்து கொண்டனர்.
50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவர் கைது
தஞ்சாவூர், செப்.30- கடல் அட்டை உள்ளிட்ட அரிய கடல்வாழ் உயிரினங்களை மீனவர்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், சேதுபாவாசத்திரம் கடற்கரையில் சிலர் கடல் அட்டை கள் வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சேது பாவாசத்திரம் கடற்கரை காவல் உதவி ஆய்வாளர் ராஜ சேகர் மற்றும் தலைமைக் காவலர்கள் ஆகியோர் அப்பகு திக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தைச் சேர்ந்த மாணிக்கம் (48), இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த ராஜா (45) ஆகியோர் என்பதும், 2 சாக்கு மூட்டைகளில் 50 கிலோ கடல் அட்டைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர், பட்டுக்கோட்டை வனச் சரக அலுவலர் சந்திர சேகரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து, கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்து, மாணிக்கம், ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இன்று முதல் அமலுக்கு வருகிறது கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு
கும்பகோணம், செப்.30 - கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்கு வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, அரியலூர், திருவாரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஏராள மானோர் கைத்தறி நெசவா ளர்கள், பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார்கள். இத்தொழி லாளர்களுக்கும் உற்பத்தியாளர் களுக்கும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு கோரிக்கைகள் மீது முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி, கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படும். இந்நிலையில் கடந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை கும்பகோ ணம் வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் 2021 பிப்.20 அன்று நடைபெற்றது. இதில் 10 சதவீத கூலி உயர்வு வழங்குவது என்றும், அதை 2021 பிப்.22 முதல் அமல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு, அதன் படி 2023 பிப்.21 வரை ஒப்பந்த மானது. ஆனால் கைத்தறி பட்டு நெசவு தொழிலாளர் சங்கங்கள், கும்பகோ ணம் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தி யாளர்கள் சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து, தற்போது வழங்கிவரும் கூலிக்கு மேல் 25 சதவீத கூலி உயர்வும், 8.33 சதவீத போனசும் வழங்கிட வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். இதில், எந்தவித நடவடிக்கைகளும் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கூலி உயர்வும், போனசும் பெற்றுத் தர வேண்டுமெனக் கோரி அக்.3 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிடப் பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் இரு தரப்பி னரையும் அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் அரசு தரப்பில், கும்ப கோணம் துணை வட்டாட்சியர் கிருபா ராணி, திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசிலா, வருவாய் ஆய் வாளர் பகவதி, கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி, நெசவாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கூட்ட மைப்பு குழு தலைவர் லெனின், பட்டு நெசவு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கோகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், தற்போ தைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு கூலியில் 10 சதவீதம் உயர்த்தி தருவது, இக்கூலி உயர்வு அக்.1 முதல் அமலுக்கு வரும் என முடிவு செய்யப்பட்டது. இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்ட னர்.
வீடு ஆக்கிரமிக்கப்பட்டு நடுவீதியில் விடப்பட்ட வாலிபர்
ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா
நாகர்கோவில், செப்.30- நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வாலிபர் ஒருவர் கொட்டும் மழையில் திடீரென அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டார். ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தர்ணாவில் ஈடுபட்ட அவரை சமாதானம் செய்தனர். அப்போது அந்த வாலிபர் தனது பெயர் ரமேஷ் (31) எனவும் திருமணமாகாத தனக்கு சகோதரர்கள் உண்டு. எங்களது பூர்வீக வீட்டில் வசித்து வந்த நிலையில், உறவினர்கள் சிலர் தன்னை வீட்டை விட்டு துரத்தி வெளியேற்றியதாக கூறினார். கடந்த 2 நாட்களா வீடு இன்றி பொது இடங்களில் படுப்பதாகவும் தெரிவித்தார். தனது வீட்டை முழுமையாக அபகரிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் கூறினார். இதனைத்தொடர்ந்து காவலர்கள் ரமேசிடம், ஆட்சியர் அலுவலகத்தில் வந்து இப்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. தங்களது புகாரை மனுவாக அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து ரமேஷ் போராட்டத்தை கைவிட்டு அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு வீடு திரும்பினார்.
கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி, செப்.30- தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், 100 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா போட்டி, மீளவட்டான் பெரியாசாமி திடலில் சனிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மேயர் ஜெகன் ஆகியார் கலந்து கொண்டு, கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கிரிக்கெட் வீரர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
அக்.7இல் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் தகவல்
தென்காசி, செப். 30 தென்காசி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் அக. 7ல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தென்காசி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அக். 7இல் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி மீட்டர் தூரமும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 5கி.மீட்டர் தூரமும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10கி. மீட்டர் தூரமும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 5 கீ.மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . போட்டியானது காலை 6 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிடவுள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்திட கடைசிநாள் அக். 6 மாலை 5.30 மணி ஆகும். மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9786918406, 9489153516 என்ற அலைபேசி எண்ணிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்கும் அனைவரும் வழங்கப்பட்டுள்ள படிவத்தை கட்டாயம் பூர்த்தி செய்திருக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு பிரிவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசுரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000 மூன்றாம் பரிசு ரூ 2000 நான்காம் பரிசு முதல் பத்தாம் பரிசு வரை ரூபாய் 1000 மும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையானது NEFT மூலம் வழங்கப்படவுள்ளதால் தங்களின் வங்கி முதல் பக்க நகலை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் .போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
திருநெல்வேலி , செப். 30- நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள முதலைகுளத்தைச் சேர்ந்தவர் காமராஜ். அவருடைய மனைவி கவிதா ( 40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். காமராஜ் குடிபழக்கம் உள்ளவர். இதனால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த 25 ல் வீட்டில் தனியாக இருந்த கவிதா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயமடைந்த கவிதாவை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.இது குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பைக் விபத்தில் பெயிண்டர் பலி
தூத்துக்குடி, செப்.30- தூத்துக்குடி கே.டி.சி., நகர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் மாசானம் மகன் 44 வயதான சீனி ராஜா, இவர் தூத்துக் குடி எட்டயபுரம் ரோட்டில் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் ஓர்க்க்ஷாப் வைத்துள் ளார். இவர் கடந்த 28-ஆம் தேதி இரவு வேலை முடிந்து பைக்கில் சென்று கொண்டி ருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்த தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் செப்.29-ஆம் தேதி இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கனிக்கிழமை சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மறைந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி
தூத்துக்குடி, செப்.30- தூத்துக்குடியில் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமான தலைமை காவலர் குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை எஸ்பி பாலாஜி சரவணன் அவரது குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை தனிப்பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் துரைபாண்டி கடந்த 27.07.2023 அன்று உடல்நல குறைவால் காலமானார். மேற்படி துரைபாண்டி குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணையுள்ளத்தோடு, அவருடன் 2003ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு உதவும் கரங்கள் 2003 சார்பாக ரூ. 29,28,500/- பணம் நன்கொடையாக பெற்று, அவற்றை காப்பீட்டு பத்திரங்கள், காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க வைப்புத் தொகை ரசீதுகளாக செப்.30ம் தேதி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் 2003ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் துரை ப்பாண்டி துரைபாண்டி குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் உட்பட காவல் துறையினர் உடனிருந்தனர். அப்போது மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பாலாஜி சரவணன் ஒற்றுமை யுணர்வுடனும், கருணையுள்ளத்தோடும் மேற்படி நிதியை வழங்கிய 2003ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு, இந்த பெரிய நிதியுதவி அளித்தமைக்காக துரைப்பாண்டி அவர்களது குடும்பத்தார் சார்பாகவும், மாவட்ட காவல்துறை சார்பாகவும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்த நிதியை திரட்டிய 2003ம் ஆண்டு காவலர்கள் உதவும் கரங்கள் 2003 குழுவைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருட்டு
தூத்துக்குடி, செப்.30- பெரியதாழை பகுதியில் செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடிய இருவரை போலீசார் கைது செய்துள் ளனர். சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் அமைக்கப்பட்டுள்ள தனியார் செல்போன் கோபு ரத்தில் பேட்டரி திருடு போனது. இதன் மதிப்பு ரூ98 ஆயிரத்து 780 ஆகும். இது குறித்து அந்நிறுவன டெக்னி சியன் செல்வகணேசன் (25) தட்டார்மடம் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் நடராஜபிள்ளை வழக்குபதிவு விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் செல்போன் கோபுரத்தில் உடன்குடி அருகே உள்ள உத்திரமாடன் குடியி ருப்பைச் சேர்ந்த ஆதி லிங்கம் மகன் குமார் (30), கருப்பசாமி மகன் ஐகோர்ட் துரை (26) ஆகியோர் திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்து மோதி ஒருவர் பலி
அருமனை, செப்.30- கன்னியாகுமரி மாவட்டம் பணச்சமோடு அருகே அரசு பேருந்து மோதி ஒருவர் பலியான சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாங்கோடு வெள்ளச்சிப்பாறை ரோடு அருகத்து வீடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ஷிபு ( வயது 44) இவருக்கு ஷீனா என்றமனைவியும் மகளும் உள்ளனர். இவர் சனிக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வெளியே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது மார்த்தாண்டத்திலிருந்து குளப்பாறை செல்கின்ற அரசு பேருந்து எதிரே வந்த போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஷிபு வை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காரைக்கோணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இது சம்பந்தமாக அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடலை கைப்பற்றி உடல் கூறா ய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது சம்பந்தமாக அருமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுதப்படை கவாத்து பயிற்சி: எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு
தூத்துக்குடி, செப்.30- தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் மைதானத்தில் சனியன்று காலை நடைபெற்றது. மேற்படி கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்து, ஆயுதப்படை காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. புருஷோத்தமன், ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. சொக்கலிங்கம், திரு. வெங்கடேசன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. கென்னடி, திரு. சக்திவேல் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.