கோழிக்கோடு, செப்.18- கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியின் தனிமைப்படுத்தப் பட்ட நிபா வார்டு உட்பட மதிய உணவு வழங்கும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் பணி முன்னுதாரண மானது என்று அமைச்சர் முஹம்மது ரியாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து முகநூல் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நிபாவால் மருத்துவக் கல்லூரியில் தங்கியி ருப்பவர்களுக்கு மதிய உணவு வழங்கும் டிஒய்எப்ஐ-க்கு பிக் சல்யூட். நிபா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோழிக்கோடு மருத்து வக் கல்லூரிக்குச் சென்றபோது இந்தச் செயலைப் பார்க்க நேர்ந்தது. தனிமைப்படுத்தப்பட்ட வர்களுக்கு டிஒய்எப்ஐ முறையான மதிய உணவை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. டிஒய்எப்ஐ- இன் இதயப்பூர்வ மான திட்டம் மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ளது. தினமும் 3,500-க்கும் மேற்பட்ட பொடிச்சார் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை 45,05168 தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. டிஒய் எப்ஐ இன் பேக்கேஜ்டு பால் விநி யோகத் திட்டம் மாதிரிகள் இல்லா தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.