districts

img

தரங்கம்பாடி - நிக்கோபார் தீவுக்கு இடையேயான வரலாற்று தொடர்புடைய நூல் வெளியீடு

மயிலாடுதுறை, ஜூலை 19 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடியில் உள்ள டேனிஷ் அருங்காட்சிய கத்தில் தரங்கம்பாடி -நிக்கோபார் தீவுக்கும் இடையே இருந்த வரலாற்று  தொடர்பு குறித்த நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது. டென்மார்க் நாட்டில் உள்ள தரங்கம் பாடி நலச் சங்கத்தின் சார்பில் நடந்த  நூல் வெளியீட்டு விழாவிற்கு சங்கத்தின்  தலைவர் பவுல் பீட்டர்சென் தலைமை வகித்தார். நிக்கோபார் தீவில் இருந்து  வந்திருந்த ரஷீத் யூசுப் முன்னிலை வகித்து தரங்கம்பாடி, நிக்கோபார் தீவு களுக்கிடையே இருந்த வரலாற்று தொடர்பு குறித்த நூலை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், “தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்கள் 1620 முதல் 1845 வரை 225 ஆண்டு கள் ஆட்சி செய்தனர். அந்த காலக்கட்டத் தில் 100 ஆண்டுகளுக்கு மேல் நிக்கோ பார் தீவில் டேனிஷ் காலனி செயல் பட்டு வந்தது. தரங்கம்பாடிக்கும் நிக் கோபார் தீவிற்கும் இடையே நெருங்கிய வணிக தொடர்பும் இருந்துள்ளது.  நிக்கோபார் தீவில் நான்கவ்ரி என்ற இடத்தில் டென்மார்க் நாட்டின் வணிக வளாகம் செயல்பட்டது.

டென்மார்க் நாட்டில் உள்ள தரங்கம்பாடி நலச் சங்கத்தின் சார்பில் தரங்கம்பாடி -நிக் கோபார் தீவிற்கிடையே இருந்த வர லாறு தொடர்புடைய கண்காட்சியை தரங்கம்பாடியில் அமைக்க திட்ட மிட்டுள்ளோம். மேலும் டேனிஷ்கா ரர்கள் தரங்கம்பாடிக்கு வந்த 400 ஆம்  ஆண்டு நிறைவு விழா மற்றும் டேனிஷ்  கமாண்டர் இல்லம் திறப்பு விழாவை 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்த  திட்டமிட்டுள்ளோம். சங்கத்தின் முன்னாள் தலைவர் கரீன் நூட்சென் தரங்கம்பாடியில் உள்ள  வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பற்றி வரைந்துள்ள ஓவியங்களும் அவற்றுக்கு பேராசிரியர் நூட் ஹெல்ஸ்  எழுதிய விளக்கங்களுடன் கூடிய நூலை பேராசிரியர் நூட் ஹெல்ஸ் வெளியிட்டார்.  ஓவிய புத்தகங்களை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்தியா-டென்மார்க் இடையிலான வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில், தரங்கம் பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்  உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்” என  தெரிவித்தார். நிறைவாக டேனிஷ் இந்திய கலாச் சார மையத்தின் பொறுப்பாளர் சங்கர்  நன்றி கூறினார்.

;