தூத்துக்குடி, ஜூலை 2-
தூத்துக்குடி பனிமய மாதா ஆல யத்தில் தங்க தேர்திருவிழா நடைபெறு வதை முன்னிட்டு தங்கத்தேர் செல்லும் வீதிகளில் மாதா சப்பர பவனி நடந்தது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய தங்கத் தேர் திருவிழா வருகிற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5 ஆம் தேதி தங்க தேர் பவனி நடைபெறுகிறது. இந்த திருவிழா வில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாட்டி லிருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். தங்கத்தேர் திரு விழாவையொட்டி பனிமய மாதா பேரா லயம் சார்பில் சனிக்கிழமை மாலை தங்கத் தேர் வீதி உலா நடைபெறும் வீதிகளில் மாதா சப்பர பவனி நடந்தது.
இந்த சப்பர பவனியில் ஆயிரக்கணக் கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, மாதாவின் இறையருள் பக்தி பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். பின்னர் மாதா சப்பரம், தங்கத்தேர் வீதி உலா நடை பெறும் வீதிகள் வழியாக சென்று ஆல யம் சென்றடைந்தது.