districts

விதிகளை மீறிய மீன்பிடிப்பை தடை செய்திடுக!  தொடர் உண்ணாவிரதம் மீனவர்கள் நடத்த முடிவு  

மயிலாடுதுறை, ஜூலை 6-  விதிகளை மீறிய மீன்பிடிப்பை தடை செய்ய வேண்டும்  என்று வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர்.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 19 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்களின் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.   தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்கு மடி வலை, இரட்டை மடிவலை, அதிவேக இஞ்சின் பொருத்  தப்பட்ட விசைப்படகுகளை கொண்டு மீன் பிடிக்கும் தொழிலை முற்றிலும் தடை செய்ய வேண்டும், இவற்றை  கொண்டு மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபட்டால் மயிலாடு துறை மாவட்ட மீனவர் கிராமங்கள் அனைத்தும் ஒன்றி ணைந்து தொடர் ஆர்ப்பாட்டம், தொடர் உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். கடலூர் மாவட்ட மீனவர் கிராமங்கள் சுருக்கு வலைகளை தடை செய்வதற்கு வேண்டுகோள் வைக்கும்  பட்சத்தில் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.


 

;