districts

img

சிறுமியின் துண்டிக்கப்பட்ட பாதத்தை இணைத்து திருச்சி காவேரி மருத்துவமனை சாதனை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 15 - திருச்சியில் இயங்கி வரும் காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் ஒன் றரை வயது குழந்தையின் துண்டிக்கப்பட்ட பாதத்தின் முன் பகுதியை நுண்அறுவை சிகிச்சை மூலம் இணைத்து சாதனை படைத் துள்ளனர். இதுகுறித்து திருச்சி காவேரி மருத்து வமனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, காவேரி மருத்துவமனை இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்கு னர் டாக்டர் செங்குட்டுவன் நிருபர்களிடம் கூறியதாவது: “ஒன்றரை வயது குழந்தையின் கால் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கிய போது காலின் முன்பாதப்பகுதி அனைத்து விரல்களுடன் சேர்ந்து முற்றிலும் துண்டிக் கப்பட்டது.  இந்த சம்பவம் நடந்து சுமார் 3 மணி நேரம் கழித்து, அக்குழந்தை மிகுந்த ரத்தப்  போக்கின் காரணமாக, குறைந்த ரத்த அழுத்தம், இதய துடிப்பில் மாற்றம் என்ற  நிலையில், துண்டிக்கப்பட்ட பாதப் பகுதி யோடு திருச்சி காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் நுண்அறுவை சிகிச்சை துறை தலைவர்-மருத்துவர் எஸ்.ஸ்கந்தா தலைமையில், மருத்துவர்கள் அடில்அலி, முரளிதாசன், சசிகுமார், குழந்தை நலத்துறை தலைவர் செங்குட்டுவன், மயக்கமருந்தியல் துறை மருத்துவர் செந்தில்குமார் கொண்ட மருத்து வக் குழுவினரால் நுண்அறுவை சிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்ட பாத பகுதி குழந்தை யின் உடலோடு மீண்டும் இணைக்கப்பட்டது.  துண்டிக்கப்பட்ட எலும்பு பகுதியை இணைப்பதோடு மட்டுமல்லாது, பாதத்தி லுள்ள அனைத்து தசைநாண்கள், நரம்புகள்  மற்றும் ரத்தநாள இணைப்புகளும் இணைக் கப்பட்டன.

இந்த அறுவை சிகிச்சை 6 மணி  நேரம் நடைபெற்றது. மறுஇணைப்பு, மறு பதியம் என்பது அதிக சவாலான நுண் அறுவை சிகிச்சை செயல்முறைகளுள் ஒன்றாகும். இதற்கு அனுபவமும், திறனும் உள்ள மருத்துவர்கள், சிறப்பு செயல் உத்தி கள் மற்றும் உயர்நிலை சாதனங்கள் அவசி யம்.  உலகளவில் மிக நவீன அறுவை சிகிச்சைக் கான மைக்ரோஸ்கோப்களுள் ஒன்றான கினிவோ மைக்ரோஸ்கோப் திருச்சி காவேரி மருத்துவமனையில் உள்ளது. உலகளவில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கான பாத மறு இணைப்பு செயல்முறைகள் மிகக் குறை வான மருத்துவமனைகளிலேயே மேற்கொள் ளப்படுகின்றன. இந்த மிக நவீன சிகிச்சை முறை செய்யப்படவில்லை என்றால் அந்த குழந்தை, தன் பாதத்தை முற்றிலுமாக இழந்திருக்கும்.  இச்சிகிச்சைக்கு பின் இக்குழந்தை இயல்பான உணர்திறன் மற்றும் பாத செயல் பாட்டை மீண்டும் பெற்றிருக்கிறது. குழந்தை யினால் இப்போது சுறுசுறுப்பாகவும், இயல் பாகவும் நடக்க முடிகிறது. இந்த சாதனை யின் மூலம் திருச்சி காவேரி மருத்துவமனை யும் மற்றும் மருத்துவர் ஸ்கந்தா தலை மையிலான மருத்துவக் குழுவும் உலகின் மிக  உயர்ந்த மற்றும் பிரத்யேக மருத்துவ சாத னையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றி ருக்கின்றனர்.  மறுஇணைப்பு அறுவை சிகிச்சை, நீரிழிவு  பாதித்த பாத அறுவை சிகிச்சை, நீரிழிவு பாதித்த பாத அறுவை சிகிச்சை, கை  அறுவை சிகிச்சை, புற்றுநோய் பாதிப்பிற் கான மறுகட்டமைப்பு சிகிச்சை, யானைக் கால் நோய்க்கான சூப்பர் மைக்ரோசர்ஜரி உட்பட பல்வேறு பரிமாணங்களை நுண்  அறுவை சிகிச்சை பிரிவு கொண்டிருக்கிறது.  இத்தகைய நுண் அறுவை சிகிச்சைகளுக் கான வசதிகள் அனைத்தும் ஒரு கட்டமைப் பின் கீழ் திருச்சியில் வழங்கக் கூடிய மிகப் பெரிய மருத்துவ மையமாக திருச்சி காவேரி  மருத்துவமனை புகழ் பெற்றிருக்கிறது.”  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நுண் அறுவை சிகிச்சை  நிபுணர் மருத்துவர் ஸ்கந்தா, மருத்துவர்கள் செந்தில்குமார், முரளிதாசன், திவ்யா ஆகி யோர் உடனிருந்தனர்.

;