திருச்சிராப்பள்ளி, மே 20 - திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ரயில் பயணி கள் பாதுகாப்பு குழு ஆய்வு மேற்கொண்டது. ரயில் நிலையங்களில் தூய்மை வசதிகளை மேம்படுத்தும் கருத்துகளை பெற்று ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்வது இக்குழுவின் நோக்கமாகும். அந்த வகையில் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நடைமேடைகள், கழிப்பறை, காத்திருப்பு அறை. உணவகங்களில் ஆய்வு செய்தனர். அதேபோல் ரயில் நிலையத்தில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா, நிறை- குறைகள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்த னர். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி யளித்த குழுவின் உறுப்பினர்கள், ஜெயிந்தி லால் ஜெயின், மோகன்லால் கிஹாரா ஆகியோர் கூறுகையில், “தமிழ்நாட்டில் ரயில் நிலையங்கள் சிறப்பாக பராமரிக்கப்படு கின்றன. பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செயல்படுத்தப்படு கின்றன. தற்போது சிவகங்கையில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர்கள், இதே கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வந்துள் ளது. இதன் கருத்துகளை ரயில்வே நிர்வா கத்திடம் அனுப்பி வைப்போம். அதேபோல் திருச்சி முதல் தஞ்சை பயணிகள் ரயில் கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனை குறைக்க ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து உரிய தீர்வு எட்டப்படும்” என்றனர்.