districts

img

அறந்தாங்கி தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் பணியேற்பு விழா

அறந்தாங்கி, ஜூலை 2 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியில் செயல்பட்டு வரும் தி  ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் 9  ஆம் ஆண்டு பணி ஏற்பு விழா நலத் திட்ட உதவிகளோடு நடைபெற்றது.  தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப்  9 ஆம் ஆண்டு தலைவராக அப்துல் பாரி, செயலாளராக ஆண்டோ பிரவீன், பொருளாளராக முனைவர் முபாரக் அலி ஆகியோருக்கு ரோட்டரி ஆளுநர்  ராஜா கோவிந்த சாமி பொறுப்புகளை ஒப்படைத் தார்.  தகவல் தொழில்நுட்பம் கபர்கான், இளைஞர் சேவை மருத்து வர் விஜய், அறக்கட்டளை சீனிவா சன், பயிற்சியாளர் முனைவர் முஜீபுர்  ரஹ்மான், திட்ட இயக்குநர் விகாஸ்  சரவணன், சங்க நிதி முருகேசன், ரோட்ராக்ட் சேவை பாபா பகுரு தீன், மருத்துவ சேவை மருத்துவர்  முகமது அலி ஜின்னா, மருத்துவ சேவை மருத்துவர் தெட்சிணா மூர்த்தி, அடுத்த ஆண்டு தலைவராக  கணேசன், அணிகளின் சேவை வழக்கறிஞர் தெய்வரத்தினம், சமூகப் பணி விஜயகுமார், சமூக  சுகாதாரம் மருத்துவர் இளையராஜா,  ரத்ததான சேவை பழனிவேல், மக்கள் தொடர்பு நசுருதீன், நேர மேலாண்மை முகமது இப்ராகிம்சா, செயல்திட்டம் ஏ.எம்.ராஜா ஆகி யோர்  அறிவிக்கப்பட்டனர்.  முன்னதாக, ஆசை மகள் என்ற தாய்-சேய் நலத்திட்டத்தின்கீழ் ஆவு டையார்கோவில் அரசு மருத்துவ மனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன.  தி ஃபோர்ட் சிட்டி  ரோட்டரி கிளப் சார்பாக, ஆவுடை யார்கோவில் அரசு மருத்துவ மனைக்கு இரண்டு மின் விசிறி களும், மேலப்பட்டு ஆரம்ப சுகாதார  நிலையத்திற்கு ஒரு மின்விசிறியும்  வழங்கப்பட்டன.  மருத்துவர் தினத்தையொட்டி, மருத்துவர்களை கவுரவித்து நினை வுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தபால்  தினத்தையொட்டி, அறந்தாங்கி தலைமை தபால் நிலையத்தில் பணி  செய்து வரும் போஸ்ட் மாஸ்டர் உட்பட அனைத்து பணியாளர்களும் கவுரவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், அறந்தாங்கி யில் இயங்கி வரும் ரோட்டரி சங்கம்,  அறம் ரோட்டரி சங்கம், ப்ரெண்ட்ஸ் ரோட்டரி சங்கம், வணிகர் சங்கம், வர்த்தக சங்கம், திசைகள் மாணவ  வழிகாட்டி அமைப்பு, கராத்தே பிர தர்ஸ் உள்ளிட்ட சமுக அமைப்பு களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

;