districts

விடுதிகள் நடத்த உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், மே 12-  

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியார் பணிபுரி யும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் சமூக நலன்  மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப் படும் உரிமம் பெறுவதற்கு மற்றும் புதிதாக நிறுவனங்கள் தொடங்கு வதற்கும் https://tnswp.com (SINGLE WINDOW PORTAL) என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர்,  மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகம்  என்ற முகவரியிலோ அல்லது 04362 264505 தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.