districts

கால்நடை வளர்ப்பு பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர், ஜூன் 3-

     தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையத் தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 12, 19,  26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து, தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையத் தலைவர் ஜெகதீசன் கூறுகையில், ‘‘தஞ்சாவூர் - திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும், கால்நடை மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளர்ப்பு குறித்து ஜூன் 12, நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து ஜூன் 19, கறவை மாடு வளர்ப்பு குறித்து ஜூன்  26 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் இலவச பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

    பயிற்சியில் சேர விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார் நகலுடன் கலந்து கொண்டு பயனடையலாம். இதில் பங்கு பெற முன் பதிவு அவ சியம் இல்லை. மேலும் விவரங்களுக்கு 04362-264665 என்ற தொலை பேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு  கொள்ள வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.