மயிலாடுதுறை,ஜூன் 16- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 137 பயனாளிகளுக்கு ரூ.39.32 லட்சம் மதிப்பில் உதவி உப கரணங்களை சுற்றுச்சுழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார். கடந்த ஓராண்டில் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்த காத்திருப் போர் பட்டியலில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளி களுக்கும் உதவி உபகர ணங்கள் வழங்க ரூ.62 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டது. ஆனால், 37,660 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70 கோடியில் உதவி உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன. 1,228 மாற்றுத் திறனாளிகளுக்கு இணை ப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்குட்டர் வழங்கப்பட்டுள்ளன. 211505 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.360 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளியுடன் செல்லும் உதவியாளருக்கு அரசு பேருந்தில் செல்ல கட்ட ணமில்லா பயணம் மேற் கொள்ள அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட் டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு ஏதேனும் அரசின் சலு கைகள் கிடைக்க வில்லை என்றால் எங்களுடைய கவ னத்திற்கு கொண்டு வந்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடு துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.