கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ரூ.16.65 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் வழங்கினார். தோகைமலை ஊராட்சி மன்ற குழு தலைவர் சுகந்தி சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.