districts

img

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு மணல் குவாரிகளுக்கு அரசே அனுமதி வழங்குவதா? முக்கூட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாலை மறியல்

மயிலாடுதுறை, ஜூலை 19 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்துள்ள  மருதம்பள்ளம் ஊராட்சியை சுற்றி யுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களை பாழாக்கும் வகையில்  6 மணல் குவாரிகள் செயல்படு கின்றன. நான்கு வழிச்சாலை பணிக்கு  என்ற பெயரில் அரசு அனுமதித்த  அளவைவிட, பல மடங்கு ஆழத்தில் ராட்சத இயந்திரங்கள் மூலம் இயற்கை வளத்தை பல  நூறு லாரிகளில் தொடர்ந்து அள்ளி வருவதால் குவாரிகளை சுற்றி யுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும், நீரின் தன்மையும் உப்பாக  மாறி வருகிறது.  பலமுறை போராட்டங்களை நடத்தியும், அரசு அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மணல் குவாரிகளை மூடக் கோரியும் மருதம்பள்ளத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கிற பொதுமக்களுக்கு நோய்த்தொற்றை உருவாக்கும் தார் பிளாண்டை மூடக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆக்கூர் முக்கூட்டில் செவ்வாயன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் யூ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ் கண்டன உரையாற்றி னார். விவசாயத் தொழிலாளர் சங்க  ஒன்றிய செயலாளர் வீ.எம்.சர வணன், விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் எம்.எஸ்.ராஜேந்தி ரன், விவசாயத் தொழிலாளர் சங்க  ஒன்றிய தலைவர் ஜி.கருணாநிதி, ஒன்றிய தலைவர் பி.தெட்சிணா மூர்த்தி, விவசாய சங்க ஒன்றிய  பொருளாளர் என்.பன்னீர்செல் வம், துணைத்தலைவர் சுதாமன் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழலை பாதிக்கும்,  பொதுமக்களுக்கு நோய்த்தொற்றை  உருவாக்கும் தார் பிளாண்டை மூட  வேண்டும். மண் வளத்தை நாச மாக்கி, நல்ல தண்ணீரில் உப்பு  நீர் புகுவதை தடுத்திட வேண்டும்.  டெல்டா பகுதியை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அரசு  அறிவித்தும், விவசாய நிலங்களில் மணல் குவாரி அமைப்பதை தடுக்க வேண்டும். மருதம்பள்ளம் ஊராட்சியை சுற்றியுள்ள மணல் குவாரிகளை மூட வேண்டும் என முழக்கமிட்டனர். பல மணி நேரமாகியும் அதிகாரி கள் வராததால் போராட்டம் தொ டர்ந்து நடைபெற்றது. பின்னர்  வட்டாட்சியருடனான பேச்சு வார்த்தையில், உடனடியாக மணல் குவாரிகளை மூட நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப் பட்டது. இதையடுத்து தற்காலிக மாக போராட்டத்தை கைவிட்டனர்.

;