திருச்சிராப்பள்ளி,ஆக.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாநகராட்சியின் குப்பை களை கடந்த 30 ஆண்டுகளாகவும் தினமும் 200 டன்னுக்கு மேலாகவும் அதற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலம் தொட்டு திருச்சி நகராட்சி யின் குப்பைகள் தினமும் தொடர்ந்து ஒரே இடத்தில் கொட்டி வந்ததால் அரியமங்கலம் குப்பை கிடங்கில் 47.7 ஏக்கரில் குப்பைகள் மலை போல் 40 அடி உயரம் வரை குவிந்துள் ளது. இதனால் அப்பகுதியில் நிலத் தடி நீர் மாசடைந்தது. மேலும் அப் பகுதி முழுவதும் ஆண்டு கணக்கில் துர்நாற்றம் வீசி வந்ததோடு திடீர், திடீரென தீப்பிடிக்கும் சம்பவங்க ளும் நடைபெற்று வந்தன. இத னால்அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்படுதால் அப்பகுதி மக்க ளுக்கு மூச்சுத் திணல் ஏற்படுவ தோடு, தோல் நோய் போன்ற வியாதி களும் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு செல்லும் அளவிற்கு தீராத தொந்தரவாக இருந்து வந்தது. இந்நிலையில் சென்ற அரசு 47.7 ஏக்கர் நிலத்தில் உள்ள அனைத்து குப்பைகளை நிரந்தரமாக அகற்றி அந்த இடத்தை அரசின் வேறு பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவெடுத்தது. அதன்படி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ 49.98 கோடி டெண்டர் விட்டு குப்பைகளை அகற்றும் பணி நடப்பதாகவும் 70 சதவிகிதம் குப்பைகள் அகற்றப் பட்டு விட்டதாகவும் மாநகராட்சி யால் கூறப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாநக ரத்தில் 40 இடங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படும் இடங்களில் இருந்து மக்கிய குப்பைகளை 100 டன் வரை தினமும் அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு வந்து அதன் மூலம் மீத்தேன் வாயு தயார் செய்யும் திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு வரும் என்று கூறப்படு கிறது. இது மாநகராட்சி எடுத்து இருக்கும் மோசமான முடிவாகும். அரியமங்கலம் குப்பைக் கிடங்கை அகற்றக் கோரி பல ஆண்டுகாலம் பல்வேறு அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தின. அதன் விளைவாக சுமார் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு பெற்று குப்பை மேடு நிரந்தரமாக அகற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அரசி யல் கட்சிகளுக்கும், அப்பகுதி பொது மக்களுக்கும் எதிராக மாநகராட்சி நடப்பது ஏற்புடையதல்ல. எனவே மக்கள் வரிப்பணம் ரூ 49.98 கோடியை வீணடிக்கும் விதத்தில் மீண்டும் ஒரு குப்பை மேட்டை உருவாக்குவது என்பது கண்ட னத்திற்குரியது மட்டுமல்ல. திருச்சி மாநகராட்சியின் குப்பை மேலாண்மையில் ஏற்பட்டுள்ள தோல்வியை காட்டுகிறது. எனவே திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கை அந்த இடத்தை விட்டு அறவே அகற்றிடவும், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலி யுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என அவர் அந்த செய்தி குறிப்பில் தெரி வித்துள்ளார்.