districts

img

நெல்லையில் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்: திருவாரூர், நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர்/நாகப்பட்டினம்,  ஜுன் 16 - நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை  தாக்கிய பந்தல் ராஜா உள்ளிட்ட சாதி  வெறிக் கும்பலை கைது செய்து, சட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாதி மறுப்புத்  திருமண தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு  வழங்க வேண்டும் என வலியுறுத்தி திரு வாரூர் மாவட்டம் குடவாசல் வி.பி.சிந்தன்  பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செயலாளர் எம். கோபிநாத் ஆகியோர் தலைமை வகித்த னர். நன்னிலம் ஒன்றியம், பேரளம் பேருந்து நிலையம் ஏதிரே நன்னிலம் ஒன்றி யச் செயலாளர் கே.எம்.லிங்கம், நகரச்  செயலாளர் சீனி.ராஜேந்திரன் ஆகியோர்  தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்த சாமி கண்டன உரையாற்றினார்.

சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முக மது உதுமான் மற்றும் மாவட்ட, ஒன்றியக் குழு, மாதர், வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி அருகே மேல கொருக்கையில் நடந்த ஆர்ப்பாட்டத் தில் ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கடை தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ்  சந்திரபோஸ், நாகை வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாப்பாகோவில் கடைத் தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநி லக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினருமான நாகைமாலி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.அம்பிகாபதி, நாகை  தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், நாகை நகரச் செயலாளர் க.வெங்கடேசன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

;