பாபநாசம், ஜூன் 10-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார வேளாண் துறை, அட்மா திட்டம் சார்பில் அய்யம்பேட்டை அருகே உள்ள வீரமாங்குடியில் கலா ஜதா நிகழ்ச்சி நடை பெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் கனகம் துவக்கி வைத்தார். இதில் நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் பங்கேற்று தண்ணீர் சேமிப்பு, மின்சார சிக்கனம், உணவுப் பொருட் களை வீணடிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத் தினர். இதில் விவசாயிகள், கிராமமக்கள் பங்கேற்றனர்.
கணபதி அக்ரஹாரம் உதவி வேளாண் அலுவலர் குரு சரவணன், அய்யம் பேட்டை உதவி வேளாண் அலுவ லர் சதீஷ்குமார் பங்கேற்று வேளாண் துறை சார்ந்த திட் டங்களை எடுத்துக் கூறினர். இதற்கான ஏற்பாடுகளை பாப நாசம் வட்டார அட்மா திட்ட தொழிற்நுட்ப மேலாளர் சிவ ரஞ்சனி, உதவி தொழிற் நுட்ப மேலாளர் பிரியா செய்திருந் தனர்.