புதுக்கோட்டை, ஜன.2 - சட்டமன்ற உறுப்பினர் அலுவலக மாடி யில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு களுக்கான கட்டணமில்லாப் பயிற்சி மையம் அமைக்கப்படும் என கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் எம்.சின்னதுரை தெரிவித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை வட்டார மாநாடு கந்தர்வ கோட்டையில் வட்டாரத் தலைவர் ரஹ்மத் துல்லா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து மாநில பொதுக் குழு உறுப்பினர் அ.மணவாளன் பேசினார். செயலாளர் சின்னராஜா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டத் தலைவர் எம்.வீரமுத்து, செயலாளர் மு. முத்துக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசு கையில், “கந்தர்வகோட்டை பகுதியில் பொதுமக்களின், மாணவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையில், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு வசதிகளுடன் கூடிய நூலகம் கட்டப்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகள் எழுதும் மாண வர்கள் கட்டணமின்றி பயிற்சி பெறும் வகையில், புதிய நூலகத்தையும், சட்ட மன்ற உறுப்பினர் அலுவலக மாடிப் பகுதியையும் இணைத்து மாணவர் களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கட்டணமில்லா தேர்வுகள் பயிற்சி மையம் விரைவில் உருவாக்கப்படும். அறிவியல் இயக்கம் கல்வி, சுகா தாரம், வளர்ச்சி, சூழலியல், பாலின சமத்துவம் போன்றவற்றை மையப்படுத்தி தொடர்ந்து செயல்படுகிறது. மூடநம்பிக் கைகள் அற்ற சமூகத்தை உருவாக்க தொடர்ந்து செயல்படுவது பாராட்டுக்குரி யது. புதுக்கோட்டை மாவட்ட மக்களை மூட நம்பிக்கைகள் அற்ற, அறிவுச் சமூகமாக மாற்றுவதற்கு அறிவியல் இயக்கம் இன்னும் உழைக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து, கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கும் அறிவியல் இயக்கத்தின் மூத்த பொறுப்பாளர்களுக்கும் எம்.சின்ன துரை எம்எல்ஏ பரிகள் வழங்கி பாராட்டி னார். மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை ஒன்றிய-மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். கந்தர்வகோட்டை ஒன்றி யத்தில் புதிதாக வட்டார கல்வி அலுவல கம் மற்றும் வட்டார வளமையம் ஆகிய வற்றிற்கு நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டும். கந்தர்வகோட்டை பகுதியில் அறிவியல் பூங்கா அமைத்துத் தர வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில், வட்டாரத் தலைவராக துரையரசன், செயலாளராக ரகமதுல்லா, பொருளாளராக தங்கராசு உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.