அறந்தாங்கி, ஜன.1 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி பைட்டிங் ஸ்டார்ஸ் கூடைப்பந்து அகாடமியின் கௌரவத் தலைவர் ஆர். ஆர்.கே.கலைமணி பிறந்தநாள் விழா மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப் பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணியி னருக்கு அறந்தாங்கி பைட்டிங் ஸ்டார்ஸ் கூடைப் பந்தாட்ட அகாடமி கெளரவத் தலைவர் ஆர்.ஆர்.கே. கலைமணி, முன்னாள் கூடைப் பந்தாட்ட செயலா ளர் விஜயரகுநாதன் மற்றும் மணலூர் பிரபுராமன் ஆகியோர் கேடயம் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். போட்டியினை ஏராளமான பொது மக்கள் மற்றும் பெற்றோர் கண்டு ரசித்தனர்.