புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர் கோ.நம்மாழ்வாரின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கரு.இராமநாதன் தலைமையில், எஸ்.சேகர் உள்ளிட்ட விவசாயிகள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.