districts

img

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை ஊராட்சியில் நம்மாழ்வார் 8 ஆம் ஆண்டு  நினைவு தினம்

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை ஊராட்சியில் நம்மாழ்வார் 8 ஆம் ஆண்டு  நினைவு தினத்தையொட்டி யாழ் இயற்கை வேளாண் பண்ணையில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாப்படுகை ஊராட்சி மன்ற துணை தலைவர் கருப்பையன் தலைமையில் நடும் பணி நடைபெற்றது.  இயற்கை விவசாயி ராமலிங்கம், மேகநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பொன்னூர் அகோரம், மாப்படுகை மணி, பாலகுரு, கோட்டூர் ரமா, பிரபா, அலெக்சாண்டர் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.