பாபநாசம், டிச.13- கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை மற்றும் ஓய்வூதியம் உட்பட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து சாதகமான பரிந்துரைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாபநாசத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தலைமை அஞ்சலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், பாபநாசம் உட்கோட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்டச் செயலர் முத்தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். செயலாளர்கள் ஆர்த்தி, ராஜ்குமார், பொருளாளர் கருப்பையன் உட்பட பலர் பங்கேற்றனர்.