அரியலூர், ஆக.27-
அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் கடலூர் மண்டல அளவிலான ஹாக்கி போட்டிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கடலூர் மண்டல அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 14, 17, 19 வயது பிரிவில் தேர்வு நடைபெற்றது. இதில், 6 மாவட்டங்களைச் சேர்ந்த 147 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப் படுத்தினர்.
அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் முன்னி லையில், உடற்கல்வி ஆசிரியர்கள் வீரர்களை தேர்வு செய்தனர். அதில், மாணவ, மாணவிகள் 66 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வயதின் அடிப்படையில் மண்டல அளவில் நடைபெறும் ஹாக்கி விளை யாட்டு போட்டியில் அணியாக பங்கேற்பர்.