districts

2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குழித்துறை, ஏப்.29-

     கன்னியாகுமரி மாவட்டம் குழித் துறையை அடுத்துள்ள எருதூர்கடை  பகுதியில் வட்டவழங்கல் அதிகாரி  ராஜசேகர் தலைமையில்  அதிகாரி கள் வாகனத் தணிக்கை யில்  ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த காரை அதிகாரிகள் நிறுத்த முயன்றனர். ஆனால், கார் வேகமாகச் சென்ற தைத் தொடர்ந்து அதி காரிகள் ஏழு கிலோ மீட்டர் விரட்டிச் சென்று  காரை தடுத்து நிறுத்தி னர். ஓட்டுநர் தப்பியோடி விட்ட நிலையில் அதிலி ருந்த 2000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிபக்கிடங்கிலும் கடத்தலுக்கு பயன்படுத் தப்பட்ட  காரை வட்டாச்சி யர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். அரிசி கேரளாவிற்கு கடத்தப் பட்டதாகக் கூறப்படு கிறது.