திருச்சிராப்பள்ளி,அக்.29 - திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் பாரா மெடிக்கல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய 13-வது ஆண்டு தொடக்க விழா ஞாயிறன்று மருத்துவமனை வளாகத் தில் நடந்தது. ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஜி.கோவிந்தராஜ் வர்தனன் வர வேற்றார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் தலைமை சிறப்பு விருந்தின ராக பங்கேற்று, ஆண்டு விழா மலரை வெளி யிட்டு பேசினார். பேராசிரியர் ஈட்டி கணேஷ், கின்னஸ் சாதனையாளர் விஜய் டிவி புகழ் ஹானஸ்ட் ராஜ், திமுக ஒன்றியச் செயலாளர் கருப்பையா, பஞ்சாயத்து தலைவர் வெள்ளைச் சாமி, மருத்துவ கண்காணிப்பாளர் பொன்.சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், 2021-23 கல்வியாண்டில் ரோஸ் கார்டன் பாரா மெடிக்கல் மையத்தில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா வும், நடப்பு கல்வியாண்டில் புதிதாக சேர்ந் துள்ள மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழாவும் நடந்தது. மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பி.சசி பிரியா நன்றி கூறினார். பாராமெடிக்கல் மாணவ மாணவிகள், ஊழியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.