districts

img

10, 12 ஆம் பொதுத் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

மயிலாடுதுறை, ஜூலை 24 - மயிலாடுதுறை மாவட்டம் மேலையூரில் உள்ள அழகு ஜோதி அகாடமி  பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாண வர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் 12 ஆம் வகுப்பு தேர்வில்  முதலிடம் பிடித்த சுவாதி (481), இரண்டாமிடம் ராஜகுமாரி (480), மூன்றா மிடம் சுதன் சங்கர் (477), நான்காமிடம் திரிஷா (468) மற்றும் 10 ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த விஷ்ணு பிரசாத் (489), இரண்டாமிடம் நவ்யா (486), மூன்றா மிடம் கார்த்திக்(482), நான்காமிடம் நந்தினி (482) ஆகியோருக்கு பொன்னாடை  போர்த்தி, மலர்ச்செண்டு கொடுத்து கவுரவித்து பாராட்டினர். பள்ளி குழு  தலைவர் அ.கண்ணன், தாளாளர் சிவகுமார், பள்ளி முதல்வர் ஜான் லா ரன்ஸ், துணை முதல்வர் அமுதா உள்ளிட்டோர் விழாவை சிறப்பித்தனர். இது மட்டுமன்றி ஆசிரியர்களையும் பாராட்டினர்.

;