districts

img

‘ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் திட்ட அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்’

திருச்சிராப்பள்ளி, ஜூன் 4-

    ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையத்தின் திட்ட அறிக்கை விரை வில் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரி கள் தரப்பில் கூறப்படுகிறது.

    திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலை யம் அமைக்க வேண்டும் என்பது  ஸ்ரீரங்கம் பகுதிவாசிகள் மற்றும் பக்தர் களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மாநகராட்சி நீண்ட இடை வெளிக்குப் பிறகு சுமார் ஒரு வருடத் திற்கு முன்பு முன்மொழிவை புதுப் பித்து, பேருந்து நிலையத்தை அமைப்ப தற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந் தது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் ராஜகோபுரம் அருகே அடையாளம் காணப்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) விரைவில் மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

   ஸ்ரீரங்கத்தில் ஒரு ஏக்கர் நிலப் பரப்பில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்  நிறுவனம் ஒரு வாரத்திற்குள் தமது  அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மாநக ராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தின்  கட்டமைப்பு வடிவமைப்பை இறுதி செய்யும்.

    திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆரம் பத்தில் பேருந்து நிலையத்துடன் இரண்டு மாடிகள் கொண்ட வணிக வளா கத்தை கட்டத் திட்டமிட்டது. ஆனால், கோவிலின் ராஜகோபுரத்தை ஒட்டி  உள்ளதால், தரை மற்றும் ஓரடுக்கு வளாகமாக வடிவமைப்பை மாற்றி,  வணிக வளாகத்தின் உயரத்தை அதி காரிகள் குறைக்க வாய்ப்புள்ளது. உத்தேச வசதிகள் மற்றும் வடிவமைப்பு  திட்ட அறிக்கை கிடைத்த பிறகு தெரிய வரும்.

   திட்ட அறிக்கை  நிர்வாக அனுமதிக் காக நகராட்சி நிர்வாகத் துறைக்கு சமர்ப்பிக்கப்படும்” என்று மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், திட்ட மதிப்பீடு, முன்பு கூறிய ரூ.10 கோடியில் இருந்து ரூ.11.5  கோடியாக மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.

   ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டதும் ஈவிஎஸ் சாலை அருகே  நிறுத்தப்படும் மாநகர் பேருந்துகள் அங்கு இடமாற்றம் செய்யப்படும் என்று  அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கும் இடையே அமைக் கப்படும் இந்த பேருந்து முனையத் தில் ஒரு நாளைக்கு குறைந்தது 80 பேருந் துகள் வந்து செல்லும் வகையில் அமையும்.

   ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பது குறித்து 1996-ஆம் ஆண்டு  முதல் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில்  பல தீர்மானங்கள் மற்றும் அறிவிப்புகள்  செய்யப்பட்டும் அவை எதுவும் நிறை வேற்றப்படவில்லை. திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு களும் வெளியாகின. அவை பலனளிக்க வில்லை.அவை காகிதத்தில் மட்டுமே இருந்தன.

   சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பேருந்து நிலையம் அமைக்கப்படும்  பேருந்து நிலையங்களில் எட்டு பேருந்து களை நிறுத்தி இயக்கலாம். இங்கு சுகா தார வளாகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

   2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் டில் மாநகராட்சி நிதி ஒதுக்கும் என்று  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேருந்து நிலையம் குறித்து எந்த குறிப்பும் இல்லை. இதனால் ஸ்ரீரங்கம் வாசிகள் அதிருப்தி அடைந்தனர்.

   தற்போது உள்ளாட்சித்துறை அமைச் சர் கே.என்.நேரு-வின் முயற்சியால் ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைய உள்ளது பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;