districts

வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு

திண்டுக்கல், மே 7- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க  வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.  குஜிலியம்பாறையில் வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநில இணைச்செயலாளர் சி.பாலச்சந்திரபோஸ் துவக்கி வைத்துப்பேசினார். சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் பாலசுப்ரமணி வாழ்த்தி பேசினார். மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி நிறைவுரையாற்றினார். மாநாட்டில் புதிய ஒன்றிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலை வராக ஜே.கே.சரவணன், செயலாளராக ஜே.சரவ ணன், பொருளாளராக ஆர்.விக்னேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.