districts

காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்திடுக! ஒட்டன்சத்திரம் விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்

திண்டுக்கல், ஜுலை 12- காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதார  விலை நிர்ணயித்திட வேண்டும் என்று தமிழ்  நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒட்டன்சத்தி ரம் ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.  மாநாட்டுக்கு என்.பழனிச்சாமி தலைமை  வகித்தார். முன்னாள் மாநில துணைத்தலை வர் பி.செல்வராஜ், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச்செயலாளர் கே.அருள்  செல்வன், ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலாளர் தயாளன் ஆகியோர் பேசினர்.  மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். தலைவராக எம்.கருணாகரன், செயலாளராக எஸ்.மனோகரன், பொருளா ளராக தண்டபாணி, துணைத்தலைவராக ஜி.பழனிச்சாமி, துணைச்செயலாளர் களாக எம்.பழனிச்சாமி, மாயகிருஷ்ணன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஓட்டன்சத்திரத்திரம் காய்கறி மார்க் கெட் தென் மாநிலத்தில் பெரிய காய்கறி மார்க்கெட் ஆகும். இந்த காய்கறி மார்க்  கெட்டில் விவசாயிகள் கொண்டு வரும்  காய்கறிகளுக்கு விலை ஏற்ற இறக்கமாக வும், கட்டுப்படியாகாமலும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அரசு விவசாயிகளின் காய்கறி விளை  பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை யை நிர்ணயித்திட முன்வர வேண்டும் என்று  வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;