districts

img

பஞ்சமி நிலங்களை வகைமாற்றம் செய்ய விவசாயிகள் சங்க மாநாடு எதிர்ப்பு

திண்டுக்கல், ஜுன் 7- திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் பஞ்சமி, உபரி, பூமி தான நிலங்களை வகைமாற்றம் செய்யக்கூடாது என்றும், ஏழை எளிய விவசாயிகளின் நிலஉரிமையை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கேட்டுக்கொண்டுள்ளது. ஞாயிறன்று பொருளுரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டச்செயலாளர் என்.பெருமாள், மாவட்டத்தலைவர் பி.செல்வராஜ். சிபிஎம் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எம்.ராமசாமி சிபிஎம் ஒன்றியச்செயலாளர் கனகு ஆகியோர் பேசினர். ஒன்றிய புதிய தலைவராக வேலுச்சாமி, செயலாளராக சின்னதுரை, பொருளாளராக மயில்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.