districts

img

அடுத்தடுத்து தொடரும் விபத்து; உயிர்ப்பலி

திண்டுக்கல், ஜூன் 18-  ரயில் விபத்துக்களுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும்; ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பதவி  நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

திண்டுக்கல்லில் செவ்வாயன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கே. பாலகிருஷ்ணன், இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:

ஓவ்வொரு முறை ரயில் விபத்து ஏற்படும் போதும் ‘கவச்’ தொழில் நுட்பத்தை நாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம் என்று ரயில்வே கூறுகிறது. ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட போதும் இதே போல கூறினார்கள். இப்போது மேற்கு வங்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒரே டிராக்கில் எப்படி இரண்டு ரயில்கள் வர முடியும். எதனால் இப்படி நடை பெறுகிறது. இது பற்றியெல்லாம் அரசு ஒன்றும் சொல்வதில்லை. 

ஏற்கெனவே இருந்த ரயில்வே அமைச்சர் தான் இப்போதும் நீடிக்கிறார். பயணிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாத அவரே மீண்டும் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். அவரும், ஒவ்வொரு விபத்தின் போதும்  ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தப்பித்துக் கொள்கிறார். இந்த ரயில்வே அமைச்சரை மாற்ற வேண்டும். இது போன்ற ரயில் விபத்துக்களுக்கு ஒன்றிய  அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ரயில்வே அமைச்சர் ஏன் ராஜினாமா செய்யக்கூடாது.? ஏன் அவரைப் பதவி நீக்கம் செய்யக்கூடாது. ரயிலில் பயணம் செய்யவே பயமாக இருக்கிறது. ஒன்றிய அரசு இது பற்றி தீவிரமாக நட வடிக்கை எடுக்க வேண்டும். உரிய விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டுக்கு  நீட் விலக்கு வேண்டும்! 

நாடு முழுவதும் நீட் தேர்வில் ஏற்பட்டி ருக்கிற குளறுபடிகள் உச்சத்திற்கு போயுள்ளது. உச்ச நீதிமன்றமே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. 1563 மாணவ - மாணவியர்களுக்கு வழங்கப் பட்டுள்ள கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நீட்டில் என்னென்ன முறைகேடு நடந்துள்ளது என்று மிகத் தெளிவாக பத்திரிகை,  ஊடகங்களில் வந்துள்ளது. மாணவர்களை அழைத்துச் சென்று பீகாரில் ஒரு பள்ளிக்கூடத்தில் தங்க வைத்து விடைத்தாளைக் கொடுத்து அவர்களை பரிட்சை எழுத வைத்து மதிப்பெண்கள் போட்டு உள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் இந்த நீட் பயிற்சியில் புரளுவதாக  உண்மைகள் வெளிவந்துள்ளன. ஆனால், ஆங்காங்கு சில குளறுபடிகள் தான் ஏற்பட்டி ருக்கிறதே தவிர வேறு ஒன்றும் தப்பு நடக்க வில்லை என்று ஒன்றிய அமைச்சர் சொல்வது என்ன நியாயம்? கிட்டத்தட்ட 25 லட்சம் மாணவ -மாணவியர்கள் தேர்வு எழுது கிறார்கள். அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளா கிறார்களா? இல்லையா? 

நீட் தேர்வு பெற்றோர்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் பணச்சுமையையும், மனச்சுமையையும் தான் ஏற்படுத்தியுள்ளது. எந்த மாநிலம் விரும்புகிறதோ, அந்த மாநிலத்தில் நீட்டை அமலாக்குங்கள். விருப்பமில்லை என்று சொல்லும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு விலக்கு அளியுங்கள். 

கூட்டணி சமையல் ரொம்ப நாள் தாங்காது 

இன்றைக்கு உள்ள சூழ்நிலையை பார்க்கும்  போது மோடி அரசு எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கும் என்பது தெரியாது. ஆட்சி அமைத்த அடுத்த நாளே ஷிண்டே ஆர்ப்பாட்டம் செய் கிறார். சிவ சேனாவிலிருந்து பிரிந்து போன கட்சிகள் திரும்பி வருவதாக சொல்கிறார்கள். அதனால் இந்த ஆட்சி நீடிக்குமா? என்பது சந்தேகமே. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். குஜராத்திலும் சரி, தில்லியிலும் சரி பாஜக தலை வர்களையே ஒருங்கிணைத்து ஆட்சி நடத்திய அனுபவம் இல்லாதவர் மோடி. கூட்டுத் தலைமை யுடன் செயல்படுகிற பண்பாடே இல்லாதவர். எதேச்சதிகார ஆட்சி நடத்தியே பழக்கப்பட்டவர் எத்தனை நாளைக்கு கூட்டணி சமையல் நடத்தப் போகிறார் என்று தெரியவில்லை. 

அதிமுக இப்படி ஜகா வாங்கலாமா? 

விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிடப் போவதில்லை என்று சொல்வது மோசடியானது. இடைத்தேர்தலை சந்திக்கிற திராணியோ,  தைரியமோ அதிமுகவிற்கு இல்லை  என்றாகிவிட்டது. இதே எடப்பாடி பழனிச்சாமி தான் 2 நாட்களுக்கு முன்பு நாங்கள் வேட்பாளர் களை நிறுத்தப் போவதாக அறிவிப்போம் என்று கோயமுத்தூரில் சொன்னார். இந்த 2 நாளில் வேட்பாளரை போட முடியாது என்று ஏன் அறிவிக்கிறார். 

2 நாளைக்குள் அவரால் வேட்பாளரை ஏன் அறிவிக்க முடியவில்லை என்றால் அனேகமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதிமுக இவரது கட்டுப்பாட்டில் இல்லை  என்று தெரிகிறது. ஆகவே அவர்கள் அதிமுக போட்டியிடுவதை விரும்பவில்லை. எடப்பாடி பழனிச்சாமி  தனது விருப்பத்தை மாற்றிக்கொண் டார். கடந்த தேர்தலில்  அதிமுகவிற்கும், திமுகவிற்கும் 9 ஆயிரம் வாக்குகள்தான் வித்தியாசம். தற்போது தேர்தல் புறக்கணிப்பு மூலம் அதிமுகவினர் வாக்குசெலுத்தமாட்டார்கள் என்றால், கட்சி கட்டுப்பாட்டுக்கள் இருப்பதாக கூறலாம். ஒருவேளை புறக்கணிப்பை மீறி அதிமுகவினர் வேறு அணிக்கு வாக்களித்தால் எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என்று தான் அர்த்தம்

காவிரியில் தண்ணீர் திறந்திடுக! 

காவிரி பிரச்சனை மீண்டும் வலுவாக முன்னுக்கு வந்துள்ளது.  கர்நாடக அரசு தண்ணீர்  தராததால், ஜூன் 12 அன்று மேட்டூர் அணையைத் திறப்பது தாமதமாகி உள்ளது. இந்த ஆண்டு  குறுவை சாகுபடி நடக்குமா? நடக்காதா? என்ற  நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த காவிரி ஆணைய கூட்டத்தில் தண்ணீர் திறப்பது குறித்து வலி யுறுத்த உள்ளோம் என்று வேளாண் அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில், கர்நாடகம் திறக்க வேண்டிய தண்ணீரை உடனே திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மக்காச்சோள விவசாயிகளுக்கு   இழப்பீடு வழங்குக!

திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் மக்காச்சோள விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டது. அரசு அதனை கணக்கெடு த்து நிவாரணம் கொடுத்தது. மக்காச்சோளத்தில் அடிக்கடி நோய் ஏன் வருகிறது என்பதை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். வெளிநாட்டிலிருந்து வரும் விதை யிலிருந்து இப்படி நோய் பரவுவதாக சொல்கிறார்கள். கடுமையான பாதிப்புகளை விவ சாயிகள் சந்திக்கிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை வழங்க அரசு முன்வரவேண்டும்.

வாழ்வாதாரம் காத்திடுக!

பழனியில் நடைபாதை வியாபாரிகளின் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளன. காலங்காலமாக அந்த கோவிலை நம்பி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்களை திடீ ரென்று அங்கிருந்து அப்புறப்படுத்துவது சரியல்ல. அவர்கள் வேறு தொழில் செய்ய முடி யாது; வேறு வருமானம் அவர்களுக்கு இல்லை.  நீதிமன்ற உத்தரவு என்று கூறி பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகளோ, நகராட்சி அதி காரிகளோ நல்ல இடத்தை தேர்வு செய்து  அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கை யை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கே. பால கிருஷ்ணன் கூறினார். பேட்டியின்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராம லிங்கம், மக்களவை உறுப்பினர் ஆர். சச்சி தானந்தம்,  மாவட்டச்செயலாளர் பி.செல்வராஜ், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பி. வசந்தா மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




 

;