districts

img

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தீர்வு காணக்கோரி தீக்குளிக்க முயற்சி

தருமபுரி, மே 2- பொதுப்பாதையை தனி நபர் ஆக்கிரமித்து கொண்டு  பள்ளி மாணவர்களை நடக்க  விடாமல் தொந்தரவு செய்த தால் பள்ளி மாணவர்களு டன் ‌15 பேர் ‌தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேப் பம்பட்டி அருகே பூதிநத்தம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், இவர்க ளின் விவசாய பொருட்களை சந்தைபடுத்த வும் பொது சாலை உள்ளது. இந்த சாலையை இந்த குடும்பத்தினர் சுமார் ‌90 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் சென்றுதான் காலம்கால மாக வேடியப்பன் ‌கோயிலுக்கு சென்று வழி பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் கண்ணன் என்பவர்  இந்த நிலத்தை சொந்தம் கொண்டாடி பாதையை மறித்து வரு கிறார். இது குறித்து பூதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அரூர் கோட்டாட்சியரிடம் மனுகொடுத்தும் பயனில்லை எனக்கூறி பள்ளி மாணவர்கள் உட்பட 15 பேர் தருமபுரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடி ரென  தீ குளிக்க முயன்றனர்.  இவர்களை  போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் ஆட்சியர் மருத்துவர் வைத்தியந்தன், தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம்  சாந்தி ஆகியோர் அவர்களின் பிரச்சனை களை கேட்டறிந்தனர்.