districts

img

கர்ப்பிணி உயிரிழப்பு - உறவினர்கள் மறியல்

தருமபுரி, ஏப்.1- கர்ப்பிணி பெண் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள்‌ அரூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம்,  ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெய குமார்  என்கிற பிரதீப்.  இவர் கோவை யில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சோனியா (20). இவர் களுக்கு கடந்த 11 மாதத்திற்கு முன்பு  திருமணம்  நடந்தது. சோனியா 9 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்நிலையில், வியாழனன்று இரவு வீட்டில் சோனியா தூக்கில் தொங்கியப் படி மர்மமான முறையில் உயிரி ழந்து கிடந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அரூர் காவல் துறையின ருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் காவல் ஆய்வாளர் லட்சுமண தாஸ் உள்ளிட்ட காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சோனியா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக் காக அரூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சோனியாவின் தந்தை சிங்காரம், அரூர் காவல் நிலை யத்தில் அளித்த புகாரில், தனது மகள் சோனியா, தற்கொலை செய்து கொள் ளும் அளவுக்கு எண்ணம் கொண்ட வர் இல்லை என்றும், அவரது உயிரி ழப்பில் மர்மம் உள்ளது என்றும், தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே, சோனி யாவின் உயிரிழப்பிற்கு காரணமா னவர்களை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சோனியாவின் உடலை பெற்று கொள்ள மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடு பட்டோருடன் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். இதில், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் கண்டறியப் பட்டு கைது செய்யப்படுவர் என அதி காரிகள் உறுயளித்தனர். இதைய டுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;