districts

img

ஆக்கிரமிக்கப்பட்ட பொதுப்பாதையை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு

தருமபுரி, டிச.26- கிராம மக்களின் பொதுவழிப்பாதையை ஆக்கிரமித் துள்ள தனிநபரிடம் இருந்து மீட்டு மக்கள் பயண்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியரி டம் கிராம மக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மக்கள் அளித்துள்ள மனுவில் தெரி வித்துள்ளதாவது, தருமபுரி மாவட்டம், குரும்பட்டி கிராமத் தில் வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு பேருந்து வசதி இல் லாததால், சேசம்பட்டி பேருந்து நிறுத்தத்திற்குதான் செல்ல வேண்டும். எங்கள் ஊரிலிருந்து விவசாய நிலங்களிலுள்ள பொது நடைப்பாதை வழியாகத்தான் வர வேண்டும். சுமார் 300 வீடுகளை சார்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்ற பொது வழி நடைபாதையாகும். இந்த பாதை சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலை வரை உள்ளது. இந்நிலையில், அந்த நிலத்தை சேலத்தை சார்ந்த ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார். நிலத்தை கிரயம் பெற்ற பின்பும் இதுநாள் வரைக்கும் பொது நடை வழி பாதையை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலை யில், அந்த பொதுப்பாதையை திடீரென அடைக்க முற்பட் டுள்ளனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் தொப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். போலீசார் விசாரித்து பொது நடைவழி பாதையை தடுக்கக்கூடாது என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில், அந்த நிலத்தை சம்பந்தப்பட்டவர் வேறு நபருக்கு குத்தகைக்கு கொடுத்துள் ளார். குத்தகைக்கு எடுத்தவர் பொது வழி நடை பாதையை தடுக்க நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க முயற்சிக்கிறார். எனவே, ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பொது வழி நடைபாதை பாத்தியத்தை எங்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என தெரி வித்துள்ளனர்.

;