தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பட்டதாரி இளம் பெண் சென்னை தனி யார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த நேரத்தில் தெற்கு கோட்டை பகுதியைச் சார்ந்த கவிதாசன் என்ற இளைஞன் தனது நண்பர்கள் நான்கு பேரோடு சேர்ந்து இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி நால் வரும் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள் ளனர்.இக்கொடூரமான சம்பவத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த இளம் பெண் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பாப்பாநாடு காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் கஞ்சா விற்பனை அதிக மாக நடைபெறுவதாக தொடர்ந்து பொது மக்கள் மத்தியிலிருந்து புகார் வந்த நிலையில் போலீசார் அதை தடுப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. கஞ்சா விற்பனை தொ டர்ந்து நடந்து வந்துள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் கஞ்சா மற்றும் கள்ளச் சாராயம் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகும். போதையில் நால்வரும் சேர்ந்து இளம்பெண்ணின் வாழ்க்கையை நாசப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன் முறைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாகும். எனவே இந்த வழக்கை துரிதமாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடு மையான தண்டனை கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். 25 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
அப்பகுதியில் கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர், எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் தங்களின் அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளனர்.