தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் கடந்த வாரம் பெய்த மழையால் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சாலையை அகலப்படுத்தி, தற்காலிகமாக சாலையிலுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.