சாதியை குறிப்பிட்டு ஊராட்சி மன்ற பெண் தலைவர் மீது தாக்குதல்
குடவாசல், ஜனவரி, 28- கண்டிராமாணிக்கம் ஊராட்சி மன்ற பெண் தலைவரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம் அதிமுகவைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தங்க ராசன்(60). இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். ஜன.26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தினத்தன்று ஊராட்சி அலு வலகத்தில் தேசிய கொடியை ஏற்றிவிட்டு வந்துள்ளார். அப்போது எதிரே வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, முன்னாள் துணை தலைவர் தெய்வசிகாமணி ஆகி யோர், தமிழ்செல்வியை வழிமறித்து அவருடைய சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அவருடைய கணவர் தங்க ராசனை தாக்க முற்பட்டதாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், மேற்கண்ட இருவரும் தம்மை மக்கள் பணி செய்ய விடாமல் தொடர்ந்து இடையூறு செய்வதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் குடவாசல் காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவங்கியது
அரியலூர், ஜன.28- ஜெயங்கொண்டத்தில் பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கலைக்கல்லூரி மைதா னத்தில் கே.கே.பி. வாரியர்ஸ் நடத்தும் இரண்டாம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி வியாழனன்று தொடங்கியது. விழா வில் கே.கே.பி வாரியர்ஸ் அணியின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் தலைமை வகித்தார். பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட அளவில் நடை பெறும் இப்போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. ஒவ்வொரு அணிக்கும் தலா 7 சுற்றுகள் விளை யாடி பின்னர் அரையிறுதி போட்டியில் தகுதி பெரும் அணி, இறுதிப்போட்டியில் விளையாடும். இதில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 20 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.15 ஆயிரமும் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது.
காலமானார்
திருவாரூர், ஜன.28 - திருவாரூர் நகராட்சி ராஜா தெருவில் வசித்து வந்த ஆர்.சரோஜா அம்மாள் (78) உடல் நல குறைவால் காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பி னர் யசோதா ஸ்வீட்ஸ் உரிமை யாளர் ஏ.ஆர். செந்திகுமாரின் தாயார் ஆவார். இவரது மறைவு செய்தி அறிந்து சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, அலுவலக செயலாளர் எஸ்.ராமசாமி ஆகியோர் நேரில் சென்று அம்மையாரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வர்த்தக சங்க தலைவர்கள் சி.ஏ.பாலு, வி.கே.கே ராம மூர்த்தி, ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் கலிய மூர்த்தி, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் டி.செந்தில் (திமுக), அதிமுக நிர்வாகி ரயில் பாஸ்கர், அமமுக நிர்வாகி பழக்கடை பாண்டி, தியானபுரம் துரை (சிபிஎம்), அம்மையப் பன் நாகராஜன் (காங்கிரஸ்) மற்றும் அரசியல் கட்சி நிர்வாகி கள், வர்த்தகர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சேவை சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். நெய்விளக்கு தோப்பு மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.