districts

img

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருக்கும் மனையை மீட்க வேண்டும்: சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர், மார்ச் 8 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம் திரு வையாறு அய்யனார் கோவில் தெரு, சர்வே எண்:  347-6A6-ல், சுமார் 0.62 ஏர்ஸ் பரப்பளவுள்ள இடத்தின் உரிமையாளர் ஜெனகம் அம்மா (70) நீண்ட காலமாக குடியிருந்து வருகிறார்.  அந்த மனையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க, திருவையாறு வட்டாட்சியர், நில அளவைத் துறையில் 2  ஆண்டுகளாக விண்ணப்பித் தும், அதனை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர், வட்டாட்சி யரிடம் பலமுறை முறையிட் டும் இதுவரை எவ்வித பய னுமில்லை. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, வட்டாட்சியரிடம் தகவல் கேட்டும் எந்த தகவலும் இல்லை.  மனையை அளந்து காட்ட காலதாமதம் செய்யும் வட்டாட்சியர் அலுவல கத்தை கண்டித்து, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு செவ்வாய்க் கிழமை காத்திருப்புப் போ ராட்டம் நடைபெற்றது.  ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். பிரதீப் ராஜ் குமார் தலைமை வகித்தார். பாதிக்கப்பட்ட அம்மையார் ஜெனகம் அம்மா, கட்சி ஒன்றிய செயலாளர் ஏ.ராஜா, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் எம்.ராம், எம்.பழ னியய்யா, கிளைச் செயலா ளர் எஸ்.சுமதி, பொதுமக்கள் என 30-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  இதையடுத்து வட்டாட் சியர், அலுவலக அதிகாரி கள் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி மார்ச் 11  அன்று நில அளவை செய்து  தரப்படும் என உறுதி அளித்ததனர். இதன்பேரில் போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது.

;