தஞ்சாவூர், அக்.18- வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தையில் அதிகாரி கள் உறுதி அளித்தபடி, எம்ஜிஆர் நகர் குடி யிருப்பு பகுதியில் வீட்டிற்குள் மழைநீர் உட்புகாத வகையில், வடிகால் வசதி செய்து தர வேண்டும். பொதுக் கழிப்பிட வசதி ஏற்ப டுத்தித் தர வேண்டும். சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும். வீடு இல்லாத வர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். காலம் கடத்தாமல் நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தஞ்சை மாநகரம் எம்.ஜி.ஆர் நகர் கிளை சார்பில் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே, வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்கை களை நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநகர குழு உறுப்பினர் சி.ராஜன் தலைமை வகித்தார். சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் கோரிக்கைகளை ஆதரித்து பேசினார். சிபிஎம் மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, என்.சரவணன், இ.வசந்தி, மாந கரக் குழு மற்றும் கிளை உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் நடத்தியவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவா னந்தம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். அதில், பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்ப டும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை யேற்று காத்திருப்பு போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டது என சிபிஎம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.