districts

சாலை வசதி ஏற்படுத்தக் கோரி சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

கரூர், ஜூலை 28- கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம்  மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாத புரம், சுப்பன் ஆசாரி களத்திற்கு தார்ச்  சாலை வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி யும், விஸ்வநாதபுரம் பிரிவிலிருந்து கன்னி  வாய்க்கால் வரையில் தார்ச்சாலை அமைத்  துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் பல கட்ட போராட்டங் கள் நடத்தப்பட்டன.  மேலும் கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது. ஆனால் இன்றுவரை தார்ச்சாலை அமைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு சார்பில் மருதூர் பேரூராட்சி அலு வலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தில், கட்சியின் குளித்தலை  ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்  குழு உறுப்பினர் பி.ராஜூ, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் விளக்கிப் பேசினர். ஒன்றியக் குழு உறுப்பினர் கே.ராஜேந்தி ரன், ராஜேந்திரம் கிளைச் செயலாளர் எம்.சிவா, மூ.கா.சிவா மற்றும் ஊர் பொது மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். போராட்டத்தின் போது நடைபெற்ற சுமூக பேச்சு வார்த்தையில் ஜூலை 30 அன்று  காவல்துறையின் பாதுகாப்புடன் சாலை யை சீரமைத்து தருவதாக எழுத்துப்பூர்வ மாக கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில்  போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது. அரசு அதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றாதபட்சத்தில் மீண்டும் ஆகஸ்ட் 2 அன்று கரூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு பள்ளி குழந்தைகளு டன் போராட்டம் நடைபெறும் என ஒன்றி யச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் கூறி னார்.