districts

img

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்குக! போக்குவரத்து தொழிலாளர்கள் அதிகாலை ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 30-  14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை உடனே பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்ற அன்றே அனைத்து ஓய்வு காலப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, பேராவூரணி அரசுப் போக்குவரத் துக் கழக பணிமனை முன்பு, அரசுப் போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் அதிகாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணைச் செயலாளர் என்.நவநீதன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் ஜி.ரகு முன் னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொரு ளாளர்  கே.முருகானந்தம், துணைத் தலை வர் சி.பிரகாஷ், துணை செயலாளர்கள் சி. குமார், கே.ரவி மற்றும் கிளை உறுப்பினர் கள் பாஸ்கர், தமிழரசன், முத்தையா, கருப்பு சாமி மற்றும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சி 
திருச்சியில் தீரன்நகர், கண்டோன் மெண்ட், புறநகர், மலைக்கோட்டை, துவாக் குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய பணி மனை கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டோன்மெண்ட் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க  திருச்சி மண்டல பொதுச்செயலாளர் கரு ணாநிதி தலைமை வகித்தார். மத்திய சங்க துணைத்தலைவர் தங்கராசு, சந்திரபாபு, செல்வம், லிவிஸ் ஆகியோர் பேசினர். புறநகர் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிளைத் தலைவர் லோக நாதன் தலைமை வகித்தார். சுப்ரமணி, கார்த்தி, அருண்குமார், ஏ.கருணாநிதி ஆகியோர் பேசினர்.

கும்பகோணம்
கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு போக்குவரத்து தொழிலாளர் சங்க குடந்தை மண்டல பொதுச் செயலா ளர் மணிமாறன் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் மகேந்திரன், துணைத் தலைவர் அழகர்சாமி, ராஜ்குமார், ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர்கள் கென் னடி, தாமோதரன், அனைத்துத் துறை ஓய்வு ஊதிய சங்க மாவட்டச் செயலாளர் ராஜ கோபாலன், பக்கிரி சாமி, ராமமூர்த்தி, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதியில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் சிஐடியு கிளை சார்பில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தங்கமணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவஞானம், ராஜேந்திரன், சின்னச்சாமி, மனோகரன், வீரய்யா, சிஐடியு கிளை செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;