districts

img

நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு

தஞ்சாவூர், மே 22 -  தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்திப் சக்சேனா, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தலைமையில், சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம் மேலவெளி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும், களிமேடு கிராமத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலும், தென்பெரம்பூர் கிராமத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலும் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.  ஆய்வின்போது, மாணிக்கம் என்ற விவசாயி பேய்ரி வாய்க்காலை தூர்வாரினால் மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாது எனவும், இந்த வாய்க்கால் தூர்வாரப்பட்டு 15 வருடங்கள் ஆகிறது, தூர்வாரினால் பள்ளியேரி, வடகால் பகுதி பாசன விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார்.  பின்னர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாகவும், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி  வாயிலாகவும், நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மற்றும் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து முதற்கட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

;