தஞ்சாவூர், ஜன.23- தமிழக முன்னாள் வரு வாய்த்துறை அமைச்சர் மறைந்த எஸ்.டி.சோமசுந்தரத்தின் மனைவி சகுந்தலா சோமசுந்தரம் அம்மை யாரது படத்திறப்பு தஞ்சாவூர் மாவட் டம், பட்டுக்கோட்டை அருகே செண் டங்காடு முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்ச ரும், முன்னாள் துணை சபாநாயகரு மான பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்ட அமைச்சர் பொன்னையன் அம்மையாரது உருவப்படத்தை திறந்து வைத்தார். படத்திறப்பில், முன்னாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், உறவினர்கள் அம்மையார் சகுந்தலா சோமசுந்த ரம் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத் தினர்.