districts

img

மருதுபாண்டியர் கல்லூரியில் கருத்தரங்கு

தஞ்சாவூர், அக்.30-  தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில், பசுமை வேதியியலின் எதிர் கால சவால்களுக்கான புது மையான திறன்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.  மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா. விஜயா, துணைமுதல்வர் ரா.தங்கராஜ், ஆய்வியல் புலத்தலைவர் அர்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். உயிர் வேதியியல்துறை  உதவிப்பேராசிரியர் தன ராஜ் வரவேற்றார். நுண்ணு யிரியல்துறை உதவிப்பேரா சிரியர்  திருநீலகண்டன் நன்றி கூறினார்.  விழாவில், சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர், அருவியா டீம் டெக் பிரை வேட் லிமிட்டெட் கம்பெனி யின் நிறுவனர் சிவக்குமார் முத்துசாமி, சைன் மதர் நேச்சுரல் பிரைவேட் லிமி டெட் கம்பெனி நிறுவனர் ஞானபிரகாசம் சிங்கார வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.  விழாவிற்கான ஏற்பாடு களை நுண்ணுயிரியல் துறைத்தலைவர் பிரின்ஸ், உயிர்வேதியியல் மற்றும் வேதியியல் துறைத்தலை வர் ஏ.இராமமூர்த்தி, உயிர் தொழில் நுட்பவியல் துறைத் தலைவர் சு.இராஜகுமார், கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் ஆகியோர் செய்தி ருந்தனர்.

;