தஞ்சாவூர், அக்.13- தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி யில் நாட்டு நலப்பணித்திட்ட துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் ரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இதில், சிறப்பு விருந்தினராக தஞ்சா வூர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), தாவர வியல் துறை, உதவிப்பேராசிரியர் சு.சகா யகிரி சிறப்புரையாற்றினார். முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் (அலகு 1) என்.சந்தோஷ்குமார் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் (அலகு 2) மு.துர்காதேவி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் இளநிலை முதலா மாண்டு மாணவ-மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.