districts

விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிர்ப்பு ஒன்றிய அரசை கண்டித்து மே 25-31 வரை போராட்டம்

தஞ்சாவூர்/பெரம்பலூர்,  மே 20 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் - லிபரே சன்), விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை கணபதி நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தில், வியாழக்கிழமை மாலை  நடைபெற்றது.  கூட்டத்திற்கு இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து. உத்திராபதி தலைமை வகித் தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர்  சின்னை.பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சி.சந்திரகுமார், ஆர். தில்லைவனம், மாநகரச் செயலா ளர் பிரபாகரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், கே.பக்கிரிசாமி, பி. செந்தில்குமார், என்.சுரேஷ்குமார், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகரச் செயலாளர் தமிழ்  முதல்வன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன்  கட்சியின் சார்பில் கே.ராஜன் ஆகி யோர் பேசினர். அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலையின்னைக்கு எதிராக, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், மே 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அகில இந்திய அளவில் கிளர்ச்சி நடத்திட இடதுசாரி கட்சிகள் அறை கூவல் விடுத்துள்ளனர்.  இதனடிப்படையில், தஞ்சை மாவட் டம் முழுவதும் மே 26 ஆம் தேதி ஒன்றியத் தலைநகரங்களிலும், மே 27  அன்று தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை நகரங்களில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், மே 26 அன்று தஞ்சையில், பொது மக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோ கித்து, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை பிரச்சாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

மே 26 பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலையை உயர்த்தி, வேலை யின்மை மற்றும் வெறுப்பு அரசியலை  வளர்த்து வருகிற ஒன்றிய மோடி  அரசின் மக்கள் விரோதப் போக்கைக்  கண்டித்து மே 26 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம்  வியாழனன்று பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட  செயலாளர் ஞானசேகரன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் விவ சாய பிரிவு மாநில செயலாளர் வீர செங்கோலன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர் பலர் கலந்து  கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மே 26  அன்று புதிய பேருந்து நிலையத்தில்  கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகர மாக நடத்துவது என்றும், பெரம்ப லூர் மாவட்ட பொதுமக்கள் உள்ளிட்ட  அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் கலந்துக்கொண்டு ஆதரவு அளித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

;