districts

கொத்தடிமையாக இருந்த சிறுவன் மீட்பு

தஞ்சாவூர், ஏப்.20 - பட்டுக்கோட்டை அருகே கார்கா வயல் கிராமத்தில், சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதாக, சைல்டு லைன் அமைப்புக்கு புகார்  வந்தது. சைல்டு லைன் ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ், வருவாய்  அலுவலர்கள் மற்றும் காவல்துறை யினர் அங்கு சென்று, ஆடு மேய்த்த  சிறுவனை மீட்டு விசாரித்தனர்.  இதில், சிறுவன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ராசு மகன். சிறுவனுக்கு வயது 12 என்பது தெரிந்தது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த  செல்வராஜ் என்பவரிடம், சிறுவ னின் தந்தை ராசு ஒரு லட்சம் ரூபாய்  கடனாக பெற்றுள்ளார். ஆனால், அதை சரியாக செலுத்த முடியாத நிலையில், சிறுவனை வேலைக்கு அனுப்பியுள்ளார். ஆடுகளைக் கொடுத்து மேய்க்கு மாறு கூறிய செல்வராஜ், சிறுவனுக்கு நல்ல உணவும், தூங்குவதற்கு இட மும் வழங்காமல், கொத்தடிமை போல நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. சிறுவனை மீட்டு, தஞ்சாவூர் அரசு குழந்தைகள் காப்ப கத்தில் ஒப்படைத்தனர். பட்டுக் கோட்டை தாலுகா காவல் துறையி னர் வழக்குப் பதிந்து, தப்பியோடிய செல்வராஜை தேடி வருகின்றனர்.