districts

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 10 சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு கோவில் நிர்வாகம் மனு: இன்று மறுபரிசீலனை

கும்பகோணம், ஜூன் 7 - அமெரிக்கா, ஆஸ்திரே லியா உள்ளிட்ட வெளிநாடு களில் இருந்து மீட்கப்பட்ட 10  தமிழக கோயில் சிலைகள் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டது. தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளி நாடுகளுக்கு விற்கப்பட்ட புராதன சிலைகள் குறித்து  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தீவிர விசாரணைக்கு பின்,  அமெரிக்கா மற்றும் ஆஸ்தி ரேலியா ஆகிய நாடுகளின்  அருங்காட்சிய கங்களி லிருந்து 10 உலோக மற்றும்  கற்சிலைகள் தில்லியில் உள்ள மத்திய தொல்பொ ருள் துறை வசம் ஒப்படைக்கப் பட்டது. இதில் மீட்கப்பட்ட தமிழக கோவில் சிலை களை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கடந்த மே  1 ஆம் தேதி தில்லியில் தமிழக  டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஒப்படைத்தார். இதை யடுத்து தமிழக சிலை கடத் தல் தடுப்பு பிரிவு ஏடி எஸ்பி ராஜாராமன், அசோக்  நடராஜன் ஆகியோர் தில்லி யில் இருந்து சென்னை கொண்டு வந்தனர். இது தொடர்பாக விசா ரணை நடத்தியதில், மீட்கப் பட்ட சாமி சிலைகள் நாகப் பட்டினம், தஞ்சாவூர், திரு நெல்வேலி உள்ளிட்ட மாவட் டங்களில் இருக்கக் கூடிய கோவிலுக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து 10 சிலைகளும்  காவல்துறை வாகனத்தில் கும்பகோணம் சிலை கடத் தல் தடுப்பு பிரிவு காவல்  அலுவலகத்திற்கு கொண்டு  வரப்பட்டு, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்ற வியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா முன்னிலையில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. நீதி மன்றம் வசம் ஒப்படைக்கப் பட்ட 10 சிலைகளும் கும்ப கோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள்  பாதுகாப்பு மையத்தில் பாது காப்பாக வைக்கப்பட்டன.  இதனைத் தொடர்ந்து அந்த சிலைகளுக்கு சொந்த மான கோவில் நிர்வாக அலுவ லர்கள், கோவில் சிலைகளை  அந்தந்த கோவில்களுக்கு தர வேண்டும் என தனித் தனியாக மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது விசா ரணை நடத்திய நீதிபதி, மே  8 (புதன்கிழமை) மறுபரி சீலனை செய்யப்படும் என உத்தரவிட்டார்.

;