பாபநாசம், மே 20- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் பேரூராட்சி மன்றக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு பேரூராட் சித் தலைவர் பூங்குழலி தலைமை வகித்தார். செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலை வர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பாபநாசம் பேரூராட்சியுடன் அருகி லுள்ள ஊராட்சிகளான கோபுராஜபுரம், ராஜகிரி, திருவையாத்துக்குடி, பண் டாரவாடை, ரெகுநாதபுரம் ஆகியவற்றை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்து தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற் பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.