districts

img

22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், அக்.7 -  22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தற்போது தஞ்சாவூர் மாவட்டம் முழு வதும் குறுவை சாகுபடி அறுவடை பணி கள் நடந்து வருகிறது. இந்நிலையில், விவசா யிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ளது. இதில்  ஆலக்குடியில் உள்ள இரண்டு நெல் கொள் முதல் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. ஈரப்பதம் என்று சொல்லி இழுத்தடிக்க கூடாது. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை 22 சதவீத ஈரப்பதம் வரை கொள் முதல் செய்ய வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க குறுவை சாகு படி நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் செய்யப் பட்ட உடனேயே காலதாமதம் இல்லாமல் பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும். கடந்த 15 தினங்களுக்கு முன் நெல் விற் பனை செய்த விவசாயிகளுக்கு பணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.  தற்போது மாவட்டம் முழுவதும் பர வலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய வைத்த நெல்லும் மழையில் நனைந்து  விடுகிறது. இந்நிலை தொடர்ந்தால் விவசா யிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி  ரயில்வே கேட் அருகில் உள்ள நெல்  கொள்முதல் நிலையம் முன்பு நூற்றுக்கணக் கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் தலைமை வகித்தார்.

தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் எல்.ஞான மாணிக்கம், துணைச் செயலாளர் கோவிந்த ராஜ், சிபிஎம் தஞ்சை ஒன்றியச் செயலா ளர் கே.அபிமன்னன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், ஆலக்குடி தமிழ்நாடு விவசா யிகள் சங்க தலைவர் அசோகன், செயலா ளர் அன்பழகன், பொருளாளர் சக்திவேல் மற்றும் சங்கிலி முத்து, சண்முகவேல் உட்பட  பல விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து த.வி.ச மாநில  பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், தஞ்சை  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் மகேஸ்வரி ஆகி யோரிடம் அலைபேசி மூலம் பேசி, ஆலக்குடி  பிரச்சனை, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினார்.

;